புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்

திருவள்ளூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் நெடுஞ்சாலையோரத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, திரூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கடையின் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கட்டுமானப் பணியை நிறுத்தினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.    
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com