சேவாலயாவில் தீபாவளி கொண்டாட்டம்

திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா சேவை மையத்தில் ஆதரவற்ற , ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் முதியோருக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி திருநாள்
சேவாலயாவில் தீபாவளி கொண்டாட்டம்

திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா சேவை மையத்தில் ஆதரவற்ற , ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் முதியோருக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி திருநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
சேவாலயா சேவை மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதேபோல், நிகழாண்டில் ஆதரவற்றோர், ஏழைக் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாடினர். 
விழாவில், திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை பிரிவின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு இனிப்பு, புத்தாடை , பட்டாசுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து சேவாலயா மாணவ, மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில், சேவாலயா நிர்வாக அறங்காவலர் முரளிதரன், வளாக பொறுப்பாளர் கிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com