டெங்கு விழிப்புணர்வுப் பணியில் மாணவர்கள்

எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் வள்ளியம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காந்தி, பாரதியார், நேரு வேடமணிந்து டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்த வள்ளியம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
காந்தி, பாரதியார், நேரு வேடமணிந்து டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்த வள்ளியம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.

எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் வள்ளியம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சங்கர் தலைமை வகித்தார். முதல்வர் நளினி சங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.சுரேஷ்பாபு வரவேற்றார். இதில், பள்ளி மாணவர்கள் காந்தி, பாரதியார், நேரு வேடமணிந்து, ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி எளாவூர், துராப்பள்ளம், சுண்ணாம்புகுளம், தலையாரி பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பிரசாரத்தில் பள்ளி ஆசிரியைகள் சைலஜா, கோமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சியில் கொசு ஒழிப்புப் பணி...
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரூராட்சி செயல் அலுவலர் பா.ஜானகிராமன் மேற்பார்வையில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் 20 சுகாதாரப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரும் நாள் ஒன்றுக்கு 50 வீடுகளுக்கு சென்று, கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் பொருள்களை அகற்றுகின்றனர்.
மேலும், கொசு ஒழிப்புப் புகை அடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் புதர்கள், குப்பைகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலரும், கும்மிடிப்பூண்டி பகுதி டெங்கு ஒழிப்பு கண்காணிப்பாளருமான ரூபன்தாஸ் சனிக்கிழமை ஆய்வு செய்தார். இந்நிலையில், கொசு ஒழிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் பா.ஜானகிராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதவரத்தில்...
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுகவினர் சார்பில் திருவள்ளூர் கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆர். சிலை அருகே பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அதிமுக அம்மா அணி சோழவரம் ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்எல்ஏ டி.ஏ.ஏழுமலை, பொன்னேரி முன்னாள் எம்எல்ஏ பொன்.ராஜா ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினர்.
இதில், முன்னாள் துணைத் தலைவர் விஸ்வநாதன், பாடியநல்லூர் குமார், அலமாதி ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் சங்கத்தினர் 
நிலவேம்புக் குடிநீர் வழங்கல்...
மாதவரம் - மூலக்கடை சாலை சந்திப்பில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூலக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். செயலாளர் நித்தியானந்தன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், டாக்டர் ஷகினா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கானோருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com