புட்லூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகள் தொடக்கம்

தூய்மையே சேவை இயக்கத் திட்டத்தின் கீழ், புட்லூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
புட்லூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
புட்லூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.

தூய்மையே சேவை இயக்கத் திட்டத்தின் கீழ், புட்லூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில், ஆட்சியர் பேசியதாவது: மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் 2018, பிப்ரவரி மாதத்துக்குள் திறந்த வெளியில் மலம் கழித்தலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களின் பங்கேற்பை ஏற்படுத்தும் வகையில் 'தூய்மையே சேவை இயக்கம்' நடைபெற்று வருகிறது. 
இத்திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் தற்போது, தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன. பொது இடங்களில் தூய்மையைப் பேணுதல், வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளை அமைத்தல் ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்க வேண்டும். கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு, கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல், இதர சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
மறுசுழற்சி, மறு பயன்பாட்டின் மூலம் திட, திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியின்போது, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ச.சா. குமார், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) எ.சந்தானம், உதவி செயற்பொறியாளர் சபாநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com