மக்கள் குறை தீர் கூட்டத்தில் 377 பேர் மனுக்கள் அளிப்பு

மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 377 பேர் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் திங்கள்கிழமை மனுக்களை அளித்தனர். 

மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 377 பேர் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் திங்கள்கிழமை மனுக்களை அளித்தனர். 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றன. இக் கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை வகித்து, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையிலான மனுக்களைப் பெற்றார். இதில் நிலம் சம்பந்தமாக -95, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக -47, வேலைவாய்ப்பு சம்பந்தமாக -96  மனுக்கள் உள்பட மொத்தம் 377 மனுக்கள் பெறப்பட்டன. 
இதைத்தொடர்ந்து, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தில் 2016-17 ஆம் நிதியாண்டில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய 22 மகளிர் முகவர்கள் மற்றும் 3 நிலை முகவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் ரூ.33 ஆயிரத்திற்கான தேசிய சேமிப்புப் பத்திரங்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து மின்சார வாரியம் மூலம் ரூ.50 மதிப்பிலான எல்ஈடி மின் விளக்குகளின் விற்பனையினையும் அவர் தொடங்கி வைத்தார். 
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், நேர்முக உதவியாளர் (பொது) ரா.சக்திவேல், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) சீ.ஜானகிராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) ஆ.பாத்திமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com