எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் பிளாஸ்டிக் 

எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் பிளாஸ்டிக் 

எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொன்னேரி நகரில், நிலத்தடி நீர் மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் மாசடைய வைக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். 
துணிப்பை: கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு தேநீர்க் கடைகள், உணவகங்கள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவற்றுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள், கையில் துணிப்பை மற்றும் உணவகத்துக்கு செல்வோர், பித்தளை, எவர்சில்வர் தூக்கு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று தேவையானதை அதில் வாங்கிச் செல்வர். 
அதே போன்று பலசரக்குக் கடை, அங்காடி உள்ளிட்டவற்றுக்கு செல்லும் மக்களும் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்வர். இது போன்று பல்வேறு அன்றாட பயன்பாடுகளுக்கு பாத்திரம், துணிப்பை ஆகியவற்றையே முன்பு நம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர். இதனால், நம் தாத்தா-பாட்டிகள் தேக ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக வாழ்ந்தனர். 
பிளாஸ்டிக் யுகம்: ஆனால், தற்போது பொதுமக்கள் தேநீர்க் கடை, உணவகம், பலசரக்கு மற்றும் காய்கறி அங்காடிகளுக்கு செல்லும் போது கையை வீசிக்கொண்டு சென்று விட்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களை வியாபாரிகள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வரும் நிலை உள்ளது. இட்லி, தோசை மாவையும், கம்பு, கேழ்வரகுக் கூழையும், கரும்புச் சாற்றையும் கூட பிளாஸ்டிக் பையில் பார்சல் வாங்கிச் செல்லும் அவல நிலையை நகரம் முழுவதும் காண முடிகிறது.
மாசு மற்றும் நோய்கள்: இதுபோன்று உணவகம், பலசரக்குக் கடை உள்ளிட்ட இடங்களில் இருந்து வாங்கி செல்லப்படும் பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படுகின்றன. அதிலும் தேநீர்க் கடைகளில் சூடாக தேநீரை பிளாஸ்டிக் பையில் வாங்கிச் சென்று அருந்தும் மக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. அண்மைக் காலமாக திருமண மண்டபங்கள் மற்றும் ஒருசில உணவகங்களில் இட்லி ஊற்றுவதற்கு பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. 
சுடச் சுட பரிமாறும் உணவுகளையும் பிளாஸ்டிக் தாள்களில் பரிமாறுகின்றனர். இதுபோன்று தயாரித்து, வழங்கப்படும் உணவுகளை சாப்பிடுவோருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. 
மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் மண் வளத்தை அழித்து, நிலத்தடி நீரை மாசடையச் செய்கின்றன. அத்துடன் நிலத்தினுள் மழை நீர் செல்வதையும் தடுத்து விடுகிறது. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்துவதன் காரணமாக மண்ணும் மலடாகின்றது. மேலும் சாலையோரம் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்கை கால்நடைகளும் உண்கின்றன. இதனால் கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்பட்டு அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. 
விழிப்புணர்வு மூலம் குறைக்கலாம்: எதிர்கால சந்ததியினருக்கு எமனாக விளங்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான அவசியத்தை பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 
மேலும் துணிப்பையை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து அதனை முற்றிலும் ஒழிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் பேரூராட்சி நிர்வாகம் முன் மாதிரி முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதியில் வசிக்கும் சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

* மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் மண் வளத்தை அழித்து, நிலத்தடி நீரை மாசடையச் செய்கின்றன. அத்துடன் நிலத்தினுள் மழை நீர் செல்வதையும் தடுத்து விடுகின்றன. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் படுத்துவதன் காரணமாக மண்ணும் மலடாகின்றது. மேலும் சாலையோரம் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்கை கால்நடைகளும் உண்கின்றன. இதனால் கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்பட்டு அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com