நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அமைச்சர் ஆய்வு

கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அமைச்சர் ஆய்வு

கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, நீட் தேர்வு பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல்-9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த நீட் தேர்வு பயிற்சி முகாமை ஆய்வு செய்ய தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். தொடர்ந்து மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். எம்.பி. பி.வேணுகோபால், எம்எல்ஏ-க்கள் கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி), சிறுணியம் பலராமன் (பொன்னேரி), அலெக்ஸாண்டர் (அம்பத்தூர்), முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, ரமணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி கலை பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எம்.கே கல்வி குழும நிறுவனர் ஆர்.எஸ்.முனிரத்தினம் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 9 மையங்களில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் பள்ளிகளில் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 3,118 பேருக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது என்றார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், அதிமுக நிர்வாகிகள் கோபால் நாயுடு, ரமேஷ்குமார், கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com