தமிழக ஆந்திர எல்லை மறு வரையறை

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தமிழக - ஆந்திர எல்லை கடந்த 2017 ஆகஸ்ட்-3ஆம் தேதி வரையறை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் அளக்கப்பட்டு எல்லைப்
இரு  மாநில  எல்லைகளை  நில  வரைபடம் மூலம்  ஆய்வு  செய்த  அதிகாரிகள்.
இரு  மாநில  எல்லைகளை  நில  வரைபடம் மூலம்  ஆய்வு  செய்த  அதிகாரிகள்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தமிழக - ஆந்திர எல்லை கடந்த 2017 ஆகஸ்ட்-3ஆம் தேதி வரையறை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் அளக்கப்பட்டு எல்லைப் பகுதிகள் இறுதி செய்யப்பட்டன.
ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பாட்டைக்குப்பம் பகுதியும், அதனை ஒட்டிய ஆந்திர மாநிலம் பீமளவாரி பாளையம் பகுதியும் தமிழக -ஆந்திர எல்லைகளாக இருந்தபோதிலும் பல ஆண்டுகளாக இதில் பிரச்னைகள் இருந்து வருகின்றன. 
இந்நிலையில் தங்கள் எல்லைக்கு உள்பட்ட பழவேற்காடு ஏரியில் படகுக் குழாம் அமைக்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தில் தமிழக -ஆந்திர எல்லைக் குழப்பத்தைத் தீர்க்கலாம் என பீமளவாரி பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-3 ஆம் தேதி இரு மாநில அதிகாரிகளும் கூடி தமிழக -ஆந்திர எல்லையை அளந்து மறு வரையறை செய்து கற்களை நட்டனர்.
இதையடுத்து தமிழக -ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட இரு வீடுகள் தொடர்பாக இரு தரப்பிற்கும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தமிழக -ஆந்திர எல்லையை உறுதி செய்வதற்காக இரு மாநில அதிகாரிகளும் மேற்கண்ட பகுதிக்கு புதன்கிழமை வந்தனர்.
தமிழக தரப்பில் கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், டி.எஸ்.பி. ராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஆந்திரம் தரப்பில் தடா வட்டாட்சியர் ஏடுகொண்டலவாடு உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளும் வருகை தந்தனர்.
தொடர்ந்து, பாட்டைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் செல்வம், ராஜா மற்றும் பீமளவாரி பாளையம் ஊராட்சித் தலைவர் ரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலையில், அதிகாரிகள் நில வரைபடத்தை வைத்து எல்லையை அளந்தனர். மேற்கண்ட பகுதியில் புதர்கள் மண்டி இருந்ததால், பொக்லைன் எந்திரங்கள் மூலம் முள்புதர்கள் வெட்டப்பட்டு எல்லைப்பகுதிகள் துல்லியமாக அளக்கப்பட்டன.
இதையடுத்து, பிரச்னைக்குரிய பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதோடு, தமிழக -ஆந்திர எல்லையில் எவ்வித மாற்றமும் இல்லை என இருதரப்பு மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழக எல்லையை இறுதி செய்யும் விதமாக எல்லையில் பள்ளம் தோண்டி அங்கு அடையாள கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. 
இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக குழப்பத்தில் இருந்த தமிழக -ஆந்திர எல்லை வரையறை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, பாட்டைக்குப்பம் பகுதி தமிழக மீனவர்கள் தங்களுக்குப் படகுத் துறை இல்லாத காரணத்தால், பீமளவாரி பாளையம் பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்தி அங்கிருந்து பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வருவதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி ஏற்பட்டு வரும் மோதலைத் தவிர்க்கும் வகையில், தமிழக பகுதியில் தங்களுக்குத் தனி படகுத் துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com