புகையில்லா போகிப் பண்டிகை: விழிப்புணர்வுப் பேரணி

புகையிலா போகி பொங்கல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் பதாகை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தினர். 

புகையிலா போகி பொங்கல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் பதாகை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தினர். 
திருவள்ளூர் அருகே பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சேவாலயா அறக்கட்டளை நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். 
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 
இதில் போகியன்று டயர்கள், பிளாஸ்டிக் ஆகியவைகளை எரிக்கக் கூடாது என்பது உள்பட பல வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாக்கம் பேருந்து நிலையத்தின் முன்புறம் இருந்து தொடங்கிய பேரணி, புலியூர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று கசுவா கிராமத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. 
இந்தப் பேரணியில் திருநின்றவூர் பகுதியில் உள்ள பாலவேடு அரசு நடுநிலைப்பள்ளி , அமுதா மெட்ரிக் பள்ளி, ஹரிஹர வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேலப்பேடு சேவாலயா சமுதாயக் கல்லூரி மற்றும் நல்மேய்ப்பர் ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா பள்ளியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com