பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில்

பணி வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.உதயகுமார் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் கோ.கிரிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து, மாநிலப் பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் சு.கதிரவன் ஆகியோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். 
இதில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் வருகைப் பதிவை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட மாறுதல் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும், தொடக்கக் கல்வித் துறையை பள்ளிக் கல்வித்துறையோடு இணைத்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டப் பொருளாளர் ராஜரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் ஐயப்பன் மற்றும் ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் பு.சு.பூங்கோதை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com