மக்கள் தொடர்பு முகாம்: ரூ.17.50 கோடியில் 1,228 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 1228 பயனாளிகளுக்கு ரூ.17.45 கோடி மதிப்பிலான  பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ் மொழி மற்றும் தொல்பொருள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 1228 பயனாளிகளுக்கு ரூ.17.45 கோடி மதிப்பிலான  பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ் மொழி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஊரகத்  தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் வழங்கினர்.
திருவள்ளூர் அருகே உளுந்தை  கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்த முகாமிற்கு ஆட்சியர்  எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். துணை ஆட்சியர் ரத்னா முன்னிலை வகித்தார். இதில் தமிழ் மொழி  மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது: மாதந்தோறும் குறிப்பிட்ட  கிராமங்களை தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு  வருகின்றன. 
இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோருக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள், விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோர் உதவித் தொகை என மொத்தம்  1,228 பேருக்கு, ரூ.17.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அவர்  தெரிவித்தார்.
நிகழ்வில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழைப்பெண்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பிணி பெண்கள் உதவித் தொகை வழங்குதல், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்பட  பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அந்த வழியில் 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில்,  இந்த மாவட்டத்திற்கு 1,246 இருசக்கர வாகனங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.   
அதைத்தொடர்ந்து, 75 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 1103 பேருக்கு விலையில்லா வீட்டுமனைகள்,  நிவாரண உதவிகள்,  பழங்குடியினருக்கான சான்றிதழ்கள் உள்பட  மொத்தம் 1228 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட  உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,  எம்எல்ஏக்கள்  வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூர்), சிறுணியம் பலராமன்(பொன்னேரி), வட்டாட்சியர் தமிழ்செல்வன், அம்மா பேரவை  மாநில இணைச் செயலாளர் செவ்வை சம்பத்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் கமாண்டோ பாஸ்கர்,  ஒன்றியச் செயலாளர் சுதாகர், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு  துறை அலுவலர்கள் கலந்து 
கொண்டனர்.                    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com