தோட்டக் கலைத்துறை சார்பில் ஆடிப்பட்ட விதைப்புக்கு காய்கறி விதைகள் வழங்க ஏற்பாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆடிப்பட்ட விதைப்புக்கு தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள் விதைகள் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆடிப்பட்ட விதைப்புக்கு தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள் விதைகள் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
விவசாயிகளிடையே காய்கறித் தோட்டம் அமைப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு விதைகளை மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் தோட்டக் கலைத்துறை மூலம் ஆடிப்பட்ட விதைப்புக்கு ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வெண்டை, கீரை விதைகள், கொத்தவரை மற்றும் செடி கொடி வகை விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டிலும் ஆடிப்பட்ட விதைப்புப் பணிக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. 
இப்பணியை மேற்கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட தோட்டக் கலைத்துறைக்கு ரூ.39 லட்சத்தில் விதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இதில் விவசாயிகளுக்கு சிறு, சிறு பாக்கெட்டுகளாக வழங்குவதற்காக செடி கொடி விதைகள் ஒவ்வொரு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுலகத்திலும் வழங்கப்பட்டுள்ளன. 
அதனால், அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் செடி கொடி விதைகள் தேவைப்படுவோர் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com