ஆலையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சோழபுரம் அருகே நீர் சுத்திகரிப்பு ஆலையில் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால் கிராமத்தில் குடிநீரின்றி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை
அம்பத்தூரை அடுத்த  வெள்ளிவாயல்  பகுதியில்  உள்ள  தனியார்  குடிநீர்  தொழிற்சாலையை  அகற்றக் கோரி  ஆட்சியர்  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  கிராம  மக்கள்.
அம்பத்தூரை அடுத்த  வெள்ளிவாயல்  பகுதியில்  உள்ள  தனியார்  குடிநீர்  தொழிற்சாலையை  அகற்றக் கோரி  ஆட்சியர்  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  கிராம  மக்கள்.

சோழபுரம் அருகே நீர் சுத்திகரிப்பு ஆலையில் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால் கிராமத்தில் குடிநீரின்றி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
திருவள்ளூர் மாவட்டம், சோழபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளவாயல் ஊராட்சியில் தனியார் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில் நாள்தோறும் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் கிராமத்தில் குடிநீரியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, குறிப்பிட்ட நபர்களை ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். அப்போது, அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில் தனியார் குடிநீர் தொழிற்சாலை கடந்த 18 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தேவைக்காக நாள்தோறும் பெரிய மின்மோட்டார்கள் மூலம் 5 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வந்து தற்போது வற்றிவிட்டது. வீடுகளில் இருக்கும் ஆழ்குழாய்களில் மோட்டார் போட்டாலும் தண்ணீர் கிடைக்காத நிலை இருக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றோம்.
ஏற்கெனவே, இந்த ஆலையை அகற்றக்கோரி வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் பல்வேறு தடவை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் குடிநீர் ஆலையைத் தடை செய்ய வேண்டும். 
அதோடு எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்த மனு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com