வெறிநாய்க் கடி தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுப் பேரணி

திருவள்ளூர் அருகே, வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசி அளிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை

திருவள்ளூர் அருகே, வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசி அளிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே நத்தமேடு கிராமத்தில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு தனியார் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் காளிமுத்து தலைமை வகித்தார். இதற்கு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் கிராமத்தில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குறித்தும், அதனுடைய தீமைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர். அதற்கு முன்னதாக கால்நடை மருத்துவக்கல்லூரி தேசிய மாணவர் படையினர் சார்பில் விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.
பின்னர் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வளர்ப்பு பிராணிகள் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சட்டப்பிரிவுச் செயலாளர் புகழேந்தி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். பிரிவு மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com