ஓ.சி.எப். தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை ஆவடி ஓ.சி.எப். அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டுப் போராட்டக் குழு இணைந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஆவடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை ஆவடி ஓ.சி.எப். அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டுப் போராட்டக் குழு இணைந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஆவடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்களின் சம்மேளன பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் தலைமை வகித்தார். உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் குசேலர் போராட்டத்தை தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். இதில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில், 1961-ஆம் ஆண்டு ஓ.சி.எப். தொழிற்சாலை (பாதுகாப்பு ஆடை தயாரிப்பு நிறுவனம்) தொடங்கப்பட்டு, சுமார் 58 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுக்கு ஆர்மி லோகோ சீருடைகள், டென்ட் மற்றும் பாராசூட் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும் புல்லட் புரூப் ஜாக்கெட்டையும் வடிவமைத்து சிறந்த தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறது. இங்கு 810 பெண்கள் உள்பட 2,110 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு தனியார் மையத்துக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அன்னிய நாட்டு மூலதனத்தை 100 சதவீதம் அனுமதித்து, மேக் இன் இந்தியா என்ற பெயரில் ஓ.சி.எப். செய்யும் உற்பத்திகளை தாரை வார்த்து தொழிற்சாலையை மூடுவதற்கு சதித் திட்டம் தீட்டுகிறது . இதனை எதிர்த்து இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது. வரும் 15-ஆம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 
உண்ணாவிரதப் போராட்டத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். ஓ.சி.எப்.டபிள்யூ.யு. சங்கத்தின் மூத்த உப தலைவர் கபாலி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com