லாரி ஓட்டுநர் சாவு: செம்மண் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே செம்மண் குவாரியில் மண் எடுத்துச் செல்ல வந்த லாரி ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே செம்மண் குவாரியில் மண் எடுத்துச் செல்ல வந்த லாரி ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை கீழ்மேனி பகுதியில் செம்மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 நாள்களாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கர்(32) வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மண் நிரப்பிச் செல்ல லாரியைக் கொண்டு வந்த நிலையில், லாரியிலேயே திடீரென மயங்கி, 
உயிரிழந்தார். இதையறிந்த, மற்ற லாரி ஓட்டுநர்கள் அங்கு கூடினர். 
இந்நிலையில், தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சங்கரின் மரணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற கவரப்பேட்டை போலீஸார், மாரடைப்பு காரணமாக சங்கர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 
இதையடுத்து, லாரி ஓட்டுநர் சங்கரின் மறைவுக்கு குவாரி நிர்வாகம் இழப்பீடு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து 10 நாள்களாக இரவும், பகலும் ஓய்வின்றி குவாரியில் மண் எடுத்துச் செல்லும் வேலை பார்த்ததால், சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பிற லாரி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com