திமுக சார்பில் நல உதவிகள் அளிப்பு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மாதவரத்தை அடுத்த லட்சுமிபுரத்தில்  திங்கள்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மாதவரத்தை அடுத்த லட்சுமிபுரத்தில்  திங்கள்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக சார்பில், மாதவரத்தை அடுத்த லட்சுமிபுரம் 32-வது வட்டத்தில் , பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் தலைமை வகித்தார். மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் ஜி.துக்காராம் முன்னிலை வகித்தார். 32-வது வட்டச் செயலாளர் மு.குட்டிமோகன் வரவேற்றார். கட்சிப் பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா சிறப்புரையாற்றினர். விழாவில், ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், இலவச வேட்டி , சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், அரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கட்சியின் 32-வது வட்ட துணைச் செயலாளர் ஜெ.ஜி.தசரதன்நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com