தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்த பின்னர் திரும்பவும் பிடித்த

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்த பின்னர் திரும்பவும் பிடித்த இடத்திலேயே விடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறாக தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரை தேடிச் செல்வதற்காக சாலையைக் கடக்கும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன. அதோடு பொதுமக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதன் மூலம் இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும். ஏற்கெனவே இது குறித்து பொதுமக்களும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைக் கருத்திற்கொண்டு நகராட்சி வண்டிகள் மூலம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாய்பிடிப்போர் உதவியுடன் வலைவீசி சாலையில் சுற்றித்திரியும் நாய்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதில் வலைவீசும் போது ஒரு சில நாய்கள் தப்பித்து
ஓடியது. இதில் சனிக்கிழமை (மார்ச் 17) சுமார் 42 நாய்களைப் பிடித்து வந்து கருத்தடை சிகிச்சை செய்து நகராட்சி வளாகத்தில் அடைத்து வைத்துள்ளோம். இந்த நாய்களுக்கு 3 நாள்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து மீண்டும் வாகனத்தில் ஏற்றிச் சென்று, பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com