ராணுவக் கல்லூரியில் சேர விரும்பும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விரும்பும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விரும்பும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2019-ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுகள் வரும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில்
நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது எழுத்துத் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். இதில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே விடையளிக்க வேண்டும்.
தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.10.2018 -இல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்த நேர்முகத் தேர்வு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இதில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச மதிப்பெண் 50 சதவீதம் ஆகும்.
இதில் சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழகத்தில் வசிப்பவராக இருப்பது அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 1.1.2019-இல் 11 வயது நிரம்பியவராகவும் 13 வயதை தாண்டாதவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 1.1.2019-இல் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் தொகுப்பு ஆகியவற்றை அஞ்சல் மூலம் பெறுவதற்கு, "கமாண்டன்ட், ராஷ்ட்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண்: 248 003' என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அத்துடன் விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-க்கும் டேராடூன், டெல்பவன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் (வங்கிக் குறியீடு - 01576) மாற்றத்தக்க வகையில் கேட்புக் காசோலை (டிடி) எடுத்து அனுப்பவேண்டும்.
இதையடுத்து, பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து (இரண்டு நகல்கள்) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 3, டிஎன்பிஎஸ்சி சாலை, வ.உ.சி. நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 31.3.2018 மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைத்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com