மீன் வலையில் சிக்கிய சாமி சிலை

பழவேற்காடு ஏரியில் நடுத்திட்டு பகுதியில் மீனவர்களின் வலையில் ஒன்றரை அடி உயரமுள்ள கல்லால் ஆன கலைநயத்துடன் கூடிய பிரம்மன் சிலை  சிக்கியது.

பழவேற்காடு ஏரியில் நடுத்திட்டு பகுதியில் மீனவர்களின் வலையில் ஒன்றரை அடி உயரமுள்ள கல்லால் ஆன கலைநயத்துடன் கூடிய பிரம்மன் சிலை  சிக்கியது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் வெங்கடேசன் மற்றும் துரை மகன் பாலாஜி ஆகியோர் சுண்ணாம்புகுளத்தை ஒட்டி உள்ள பழவேற்காடு ஏரியில் நடுத்திட்டு பகுதியில் மீன் பிடிக்க வலை விரித்தனர்.
அப்போது, வலையில் கனமான பொருள் சிக்கியதை உணர்ந்த அவர்கள் பெரிய அளவில் மீன்கள் சிக்கியதாக  எண்ணி வலையை இழுத்துப் பார்த்தபோது, வலையில் சாமி சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். அந்த சிலையை கரைக்குக் கொண்டு  வந்து,  அதை அலங்கரித்து வழிபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் வந்து அந்த சிலையை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். 
அப்போது அந்த சிலையை தங்கள் கிராமத்திலேயே வைத்து வழிபடுவதாக கூறி கிராமத்தினர் சிலையைத் தர மறுத்தனர். தொடர்ந்து வருவாய்த் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி, சிலையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர்.  சாமி சிலை குறித்து, ஆரம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com