ஊராட்சி பள்ளி நூலகத்திற்கு ஓராயிரம் நூல்கள், காணொலி புரொஜக்டர் வழங்கல்

மாணவ, மாணவியரின் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில், வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றியப் பள்ளி

மாணவ, மாணவியரின் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில், வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றியப் பள்ளி நூலகத்திற்கு ஓராயிரம் நூல்கள், காணொலி புரொஜக்டர் ஆகியவை பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் சார்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.     
பள்ளிக்கு ஒரு நூலகம் என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், பொறியியல் கல்லூரி மாணவர் கீர்த்திவாசன் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே வெங்கத்தூர் கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் நூல்களை வழங்கினார். இந்த நூல்கள் மாணவ, மாணவிகள் விரும்பும், அதேசமயம் எளிதாகப் புரிந்து கொண்டு வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வழி வகை செய்யும் நூல்கள் ஆகும். அதேபோல், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் சார்பில் மாணவ, மாணவிகள் படக்காட்சிப் பதிவுடன், தொடு திரை கணினி உதவியுடன் படிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புரொஜக்டரும் வழங்கப்பட்டது.      
இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கடம்பத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் கிரிஜா, கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ரகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதில், பெரும்புதூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி முதல்வர் கணேஷ் வைத்தியநாதன் பங்கேற்று, மாணவர் கீர்த்திவாசன் சார்பில் ஓராயிரம் புத்தகங்கள் மற்றும் புரொஜக்டர் ஆகியவற்றை பள்ளி தலைமை ஆசிரியர் இசக்கியம்மாளிடம் வழங்கினார். 
இதில், உதவித் தலைமை ஆசிரியர் பாலமுருகன், பள்ளி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் மாரியம்மாள், ஆசிரியைகள் தென்றல், சகாயமேரி, பிரமிளா, நந்தினி, சரஸ்வதி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com