திருவள்ளூரில் 3 புதிய பேருந்துகள் இயக்கம்:  ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஆட்சியர் மகேஸ்வரி

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.     
சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக காளஹஸ்தி வரையில் செல்லும் 2 பேருந்துகளும், திருவள்ளூரில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மரக்காணம் செல்லும் ஒரு பேருந்தும் என 3 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இந்த புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், பொன்னேரி 
எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் கலந்து கொண்டு 3 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரையில் அப்பேருந்தில் அமர்ந்து பயணம் மேற்கொண்டனர். 
பின்னர் இது குறித்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறியது: 
சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக காளஹஸ்தி செல்லவும், திருவள்ளூரில் இருந்து மரக்காணம் செல்லவும் 3 புதிய பேருந்துகள் சனிக்கிழமை (அக்டோபர் 13) முதல் இயக்கப்படவுள்ளன. இப்பேருந்தில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. 
ஏற்கெனவே சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக திருப்பதிக்கு நாள்தோறும் 20 பேருந்துகள் சென்று வருகின்றன. 
தற்போது, புதிய கட்டமைப்புகளைக் கொண்ட வழித்தடம் எண்: 200 (இரு பேருந்துகள்) சென்னை-திருவள்ளூர்-காளஹஸ்தி வரையில் இயங்கும். அதேபோல், வழித்தடம் எண்: 588 என்ற பேருந்து திருவள்ளூரில் இருந்து மரக்காணம் வரையிலும் என 3 புதிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இப்பேருந்துகளில் திருவள்ளூர் பணிமனைக்கு 2 பேருந்துகளும், ஊத்துக்கோட்டை பணிமனைக்கு 1 பேருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.  
நிகழ்வில், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் செவ்வை சம்பத், முன்னாள் நகராட்சித் தலைவரும், மாவட்ட துணைச்செயலாளர் கமாண்டோ பாஸ்கர், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் புட்லூர் சந்திரசேகர், நகரச் செயலாளர் கந்தசாமி மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com