பருவமழைக் காலத்தில் பேரிடர் குறித்த விழிப்புணர்வு

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடர் குறித்து வருவாய்த் துறை சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நடத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடர் குறித்து வருவாய்த் துறை சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நடத்தப்பட்டது.
 திருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் கிராமத்தில், திருத்தணி வருவாய்த் துறை சார்பில், வடகிழக்குப் பருவமழையின்போது பேரிடர் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதிலிருந்து தப்பித்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி தலைமை வகித்தார். திருத்தணி வட்டாட்சியர் செங்கலா வரவேற்றார்.
 இதில், திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் பெருமாள் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது, பொதுமக்கள் எவ்வாறு அங்கிருந்து தப்பிப்பது, தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகையை நடத்தினர்.
 மேலும், கட்டட இடுபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு மீட்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். மேலும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்தால் அங்கிருந்து எவ்வாறு வெளியே வருவது? வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பிரபாகரன், வருவாய்த் துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com