கம்யூனிஸ்ட் கட்சியினரின் பிரசாரம் தொடக்கம்

மத்திய அரசைக் கண்டித்து தமிழக -ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்

மத்திய அரசைக் கண்டித்து தமிழக -ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை பிரசார பேரியக்கத்தை தொடங்கினர்.
 நீட் தேர்வு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, ஜிஎஸ்டி வரியால் சிறு தொழில் பாதிப்பு, ரேஷன் பொருள் குறைப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை உள்ளிட்டவற்றைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து திருப்பூரை நோக்கி பிரசாரப் பேரியக்கத்தை திங்கள்கிழமை முதல் நடத்தி வருகின்றன.
 அதன் ஒரு பகுதியாக தமிழக, ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற பிரசாரப் பேரியக்கத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் அருள் வரவேற்றார்.
 தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை, மாதர் சங்க மாநிலத் தலைவர் சுசீலா, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ராதாகிருஷ்ணண், பாரதி, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட ஏஐடியூசி செயலாளர் சுதாகர், முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 
 இதில், கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாநில நிர்வாகி வழக்குரைஞர் லெனின் ஆகியோர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, ஆரம்பாக்கத்தில் இருந்து பிரசார பேரியக்கப் பேரணி நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட்- ஏஐடியூசி நிர்வாகிகள் திரளாக இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் பிரசாரப் பயணமாக திருவள்ளூர் நோக்கிச் சென்றனர்.
 அப்போது வழி நெடுகிலும் மத்திய அரசைக் கண்டித்து பிரசாரம் நடத்தினர்.
பொன்னேரியில்...
பொன்னேரி, செப். 18: கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கத்தினர், பொன்னேரிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர். அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மீஞ்சூர் ஒன்றிய முன்னாள் செயலர் கிருஷ்ணன் வரவேற்றார். பின்னர், அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், ஏஐடியூசி மாநிலச் செயலர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலர் மாரியப்பன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் செந்தில், பொன்னேரி முன்னாள் 
எம்எல்ஏ கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காட்டூர் கிளைச் செயலர் செங்கொடி செல்வன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com