குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து பள்ளி மாணவிகளிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து பள்ளி மாணவிகளிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். நிகழ்வில் அவர் பேசியது:  சமூக நலத்துறை சார்பில் குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து பல்வேறு துறைகளுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
அதோடு, இது தொடர்பாக அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் காலையில் வழிபாட்டுக் கூட்டத்தின்போது குழந்தைத் திருமண தடைச்சட்டம்-2006 குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
அதேபோல், பெண் கல்வியின் அவசியம் குறித்தும் விளக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்வில், குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். 
 இதில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி உள்ளிட்ட ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com