திருத்தணி முருகன் கோயிலில் மாவட்ட நீதிபதி திடீர் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் மற்றும் திருத்தணி சார்பு நீதிபதி கபீர்

திருத்தணி முருகன் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் மற்றும் திருத்தணி சார்பு நீதிபதி கபீர் ஆகியோர் மலைக்கோயில், அன்னதானக் கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  திடீர் ஆய்வு நடத்தினர்.
 சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்  உள்ள அனைத்துக் கோயில்களையும் ஆய்வு செய்து, வரும் 29-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், திருத்தணி சார்பு நீதிபதி கபீர் மற்றும் கோயில் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர்.
 பின்னர், கோயிலில் உள்ள அன்ன தானக் கூடம், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், நீதிபதிகள் தரிசனத்தில் ஏதாவது குறைகள் உள்ளதா என பக்தர்களிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து, முருகன் கோயில் அலுவலகத்துக்குச் சென்று, நீதிபதிகள் ஊழியர்களின் வருகைப் பதிவுகளை ஆய்வு செய்தனர். 
 ஆய்வின்போது, முருகன் கோயில் இணை ஆணையர் சிவாஜி, தக்கார் வே.ஜெய்சங்கர் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com