ஆத்துரை சித்திமுக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீசித்திமுக்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆத்துரை சித்திமுக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீசித்திமுக்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆத்துரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீசித்திமுக்தி விநாயகர் கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோயில் மீதுள்ள சிற்ப பொம்மைகள் உடைந்தும் இந்ததால், ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் கோயில் சுமார் 2 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு விநாயகர்பூஜை மற்றும் முதல்காலபூஜை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு கோபூஜை, தம்பதிபூஜை என பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 9.45 மணிக்கு கலசபுறப்பாடு செய்து கோயில் கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஆத்துரை, சித்தாத்துரை, தொழிப்பேடு, தேவிகாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com