நாட்டுச் சேவல் வளர்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம்: கால்நடை ஆராய்ச்சி மையத் தலைவர் பேச்சு

விவசாயிகள் நாட்டுச் சேவல்களை வளர்த்தால், 3 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டலாம் என்று திருவண்ணாமலை கால்நடை மருத்துவ
நாட்டுச் சேவல் வளர்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம்: கால்நடை ஆராய்ச்சி மையத் தலைவர் பேச்சு

விவசாயிகள் நாட்டுச் சேவல்களை வளர்த்தால், 3 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டலாம் என்று திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவரும், இணைப் பேராசிரியருமான தியோபிலஸ் ஆனந்தகுமார் பேசினார்.
திருவண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பை-பாஸ் சாலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில், நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமைத் தொடங்கி வைத்து ஆராய்ச்சி மையத் தலைவரும், இணைப் பேராசிரியருமான தியோபிலஸ் ஆனந்த்குமார் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள், நாட்டுச் சேவல்களை வளர்த்தால் 3 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டலாம். புரதச் சத்துள்ள அசோலா, கரையான் ஆகியவற்றை வளர்த்து சேவல்களுக்கு தீவனமாகக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் அதிக எடையுள்ள சேவல்களைப் பெறலாம் என்றார்.
தொடர்ந்து, ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் துரைராஜன், கோழிகளைப் பாதிக்கும் நோய்களும், அவற்றைத் தடுக்கும் முறைகளும் என்ற தலைப்பில் பேசினார். வங்கிகளில் கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கைகள் இந்த மையத்தில் தயாரித்து தரப்படும் என்றும் அவர் பேசினார். இந்தப் பயிற்சி முகாமில், திருவண்ணாமலை, ஆரணி, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, வந்தவாசி, போளூர், செங்கம், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com