பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் அளிப்பு

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனங்களின் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனங்களின் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் நடப்பாண்டில் பட்டயப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் வளாக நேர்காணல் நடைபெற்றது. முதல்கட்டமாக யுரேகா ஃபோர்ப்ஸ், பிரேக்ஸ் இந்தியா லிமிடெட், வீட்டா இன்டஸ்ட்ரீஸ், விக்னேஷ் பாலிமர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நேர்காணலை நடத்தினர்.
இதில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகளைச் சேர்ந்த 77 மாணவ, மாணவிகள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாவது கட்டமாக அன்னை த்ரெட்ஸ், உட்ஸ்வ்கிரி கம்ப்யூட்டர்ஸ், நோக்கியா நெட்வொர்க்ஸ், ஹெ-மெக்-சிஎன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய நேர்காணலில் 126 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் கல்லூரிச் செயலர் ஏ.சி.இரவி ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி முதல்வர் டி.ஆறுமுகமுதலி பணி நியமன ஆணை பெற்ற மாணவர்களை பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com