வந்தவாசி அருகே மர்மக் காய்ச்சலால் 20-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 20-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 20-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட இரும்பேடு கிராமத்தில் கடந்த சில நாள்களாக சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வந்தவாசி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்றனர். இவர்களில் முனியம்மாள் (40), சுகுமார் (17), கலா (25) உள்ளிட்ட சிலர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக அந்தக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தலைமையில், சுகாதாரத் துறையினர் இரும்பேடு கிராமத்தில் முகாமிட்டு, கிராம மக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், வருவாய்த் துறையினரும், ஊரக வளர்ச்சித் துறையினரும் அந்தக் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு: இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது: இரும்பேடு கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் டெங்கு அறிகுறி எதுவும் இல்லை. இது வைரஸ் காய்ச்சல்தான்.
இந்தக் கிராமத்தில் உள்ள குளத்து நீரை இங்குள்ள பெரும்பாலானோர் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தண்ணீரை சோதனை செய்ததில் குடிக்க உகந்தது அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து, குளத்தின் வெளியே இந்த தண்ணீரை குடிக்காதீர்கள் என்ற தகவல் பலகை வைத்துள்ளோம்.
மேலும், நீர்நிலைகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், கிராமப் பகுதியில் கொசு ஒழிப்பு புகை அடித்தல், வீடுகளில் உள்ள தேவையற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அகற்றுதல், குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரின் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com