விவசாய கடன் வழங்க மத்திய வங்கி தெளிவான நடைமுறை: தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை

விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது கூட்டுறவு சங்க ஊழியர்களையும், விவசாயிகளையும் அலைக்கழிக்காமல் தெளிவான நடைமுறையை மத்திய

விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது கூட்டுறவு சங்க ஊழியர்களையும், விவசாயிகளையும் அலைக்கழிக்காமல் தெளிவான நடைமுறையை மத்திய வங்கி பின்பற்ற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ஜோதிமணி, செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க பொதுச் செயலர் ஆ.உதயகுமார், ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் என்.பத்ராச்சலம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சங்கப் பொருளாளர் பி.மாசிலாமணி நன்றி கூறினார்.
கூட்டத்தின்போது, கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஜூலை மாதம் இணைப்பதிவாளர் - தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் தள்ளுபடி தொகை வரவு வைத்தல், 7 சதவீத வட்டி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொடக்க கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கும், கிராம நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும் புதிய சம்பளம் நிர்ணயம் செய்ய ஊதியக் குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com