ரூ.13.51 லட்சத்தில் ஏரிக் கால்வாய் தூர்வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அருகே ரூ.13.51 லட்சத்தில் நடைபெற்று வரும் ஏரிகால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, தூர்வாரும் பணியில்

திருவண்ணாமலை அருகே ரூ.13.51 லட்சத்தில் நடைபெற்று வரும் ஏரிகால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, தூர்வாரும் பணியில் மாவட்ட ஆட்சியரும் ஈடுபட்டார்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாடழகானந்தல் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி ரூ.13.51 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. 2017-18ஆவது ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணியை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை சென்றார். அப்போது, தூர்வாரும் பணியில் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆட்சியர் நீண்ட நேரம் ஈடுபட்டார்.
ஆட்சியருடன் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வாணி, சாலை ஆய்வாளர் பரிமளா, ஊராட்சிச் செயலர்கள் சுகுமார், கண்ணன், தனசேகர், ரொசாரியோ, வெங்கடேசன், பச்சையப்பன், செந்தில் ஆகியோரும் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com