செய்யாறில் உலக மண் தினம் கடைப்பிடிப்பு

செய்யாறு பகுதியில் உள்ள கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மையம், அனக்காவூர் வட்டார வேளாண் மையம் ஆகியவற்றில் உலக மண் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

செய்யாறு பகுதியில் உள்ள கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மையம், அனக்காவூர் வட்டார வேளாண் மையம் ஆகியவற்றில் உலக மண் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் 
வே.சுரேஷ் வரவேற்றார். முன்னிலை வகித்த முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் ரமேஷ்ராஜா, மண் வள தினத்தின் முக்கியத்துவம், மண் வள பாதுகாப்பு முறைகள் குறித்து தெரிவித்தார்.
தலைமை வகித்த திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எம்.செண்பகராஜ், வேளாண் துறை மூலம் சுமார் 68 ஆயிரம் மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து துறை மூலம் நிகழாண்டும் மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட 28 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறுதானிய மகத்துவ மைய உதவிப் பேராசியர் ரமேஷ், மண் பரிசோதனையின் அவசியம் மற்றும் அதற்கு ஏற்றாற்போல் உரமிடுவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், மண் பரிசோதனை நிலையத்தின் முதுநிலை வேளாண் அலுவலர் சுதாகர், மண் பரிசோதனை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனர்.
மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் தசரதன், பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும், வெம்பாக்கம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அமல் சேவியர் பிரகாஷ், மண் வள பாதுகாப்பு முறைகள் குறித்தும், தோட்டக்
கலைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியின்போது, மண்வள பாதுகாப்பு குறித்த கண்காட்சியும் நடத்தப்பட்டது.
உலக மண் தின விழாவை முன்னிட்டு, உலக வெப்பமயமாதல் குறித்து ஓவியம், கட்டுரைப் போட்டிகள் சித்தாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.  
முன்னோடி விவசாயியும், பொன்னேரி உழவர் மன்றத் தலைவருமான வாசுதேவன், இயற்கை விவசாய முறையில் மண் வள பாதுகாப்பு முறைகள் குறித்தும், செய்யாறு கரும்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் சங்கரன், தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) நாராயணன், வேளாண் உதவி அலுவலர்கள் தங்கராஜ், சீனுவாசன் ஆகியோர் மண் வளம் குறித்தும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சித்தாத்தூர் பள்ளி ஆசிரியர்கள் பாஸ்கரன், சங்கரன், சித்தாத்தூர் வெம்பாக்கம், செய்யாறு வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் என 300 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனக்காவூர வட்டாரம்: இதேபோல, அனக்காவூர் வட்டாரம், தவசி கிராமத்தில் உலக மண் வள தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், பங்கேற்ற அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வருங்காலங்களில் ரசாயன உரங்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com