நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி என எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று குறைதீர் கூட்டத்தில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி என எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் வே.நந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் மீ.சு.செண்பகராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி என எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும் என்றனர்.
இதையடுத்துப் பேசிய ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். வட்டார அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த வேளாண்மைத் துறை கையேடு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com