நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி

வெம்பாக்கத்தை அடுத்த அரியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வெம்பாக்கத்தை அடுத்த அரியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கான வயல்வெளிப் பயிற்சிப் பள்ளி அரியூர் கிராமத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. பயிற்சி பள்ளியை தொடக்கி வைத்த அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) வே.சுரேஷ் பேசியதாவது:
வயல்வெளிப் பள்ளி என்பது நெல் பயிரின் விதை விதைப்பு முதல் அறுவடை வரையிலான முக்கிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு அவர்களை விஞ்ஞானிகள் ஆக்கும் முயற்சியாகும். வாரம் ஒரு பயிற்சியின் மூலம் நெல் பயிரில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வயல்வெளி ஆய்வு செய்யப்படும்.
அதன் பின்னர் அந்தந்த நெல் வயல்களில் காணப்படும் பயிரின் தன்மை, நோய் தாக்கம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும், விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் விதமாக முன்னோடி விவசாயி சிவபாதம், செயல் விளக்கம் செய்து காட்டினார்.
தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) ப.நாராயணன், வயல்வெளிப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்தும், இதில் விவசாயிகள் கலந்து கொள்வதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) ராஜேஷ், நேரடி நெல் விதைப்பில் நிலத்தை எவ்வாறு பண்படுத்துவது, விதையளவு, நெல் விதைப்புக் கருவியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வபாண்டியன், முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.கே. முத்து, கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com