வந்தவாசியில் பூங்காவுடன் கூடிய நடைமேடை அமைக்கக் கோரிக்கை

முதியோர், இளைஞர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் வந்தவாசியில் பூங்காவுடன் கூடிய நடைமேடை அமைத்து தர

முதியோர், இளைஞர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் வந்தவாசியில் பூங்காவுடன் கூடிய நடைமேடை அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் 60-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பொன்.ஜினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ப.குபேந்திரன், முன்னாள் செயலர் சு.காளத்தி, இணைச் செயலர் ஆர்.பொன்னம்பலம், செய்தித் தொடர்பாளர் மா.கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்புச் செயலர் வே.அரங்கநாதன் வரவேற்றார். செயலர் க.நடராசன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் மா.கோவிந்தசாமி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.குமார், மாநில துணைத் தலைவர்கள் கே.நாராயணசாமி, டி.குணசேகரன், அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி, வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை மேலாளர் பி.மகேந்திரவர்மன், வந்தவாசி சார்நிலை கருவூல அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் கே.இராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சங்க துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஓய்வு பெற்றோருக்கு 8-ஆவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை பெறும் வகையில்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com