அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள்: ஆட்சியர் ஆலோசனை

அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள்: ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஆலோசனை நடத்தினார்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலைப் பூஜைகள் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி அனைத்துத் துறைகள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், காவல் துறை சார்பில் செய்யப்படும் பாதுகாப்புப் பணிகள், நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படும் தூய்மைப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் மு.வடநேரே ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற அனைத்துத் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், காவல் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com