காமராஜர் பிறந்த நாள் விழா

வந்தவாசி, ஆரணி, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வந்தவாசி, ஆரணி, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்த நாளையொட்டி, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், கல்வி வளர்ச்சி நாள் விழா தெள்ளாறு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை க.ஜான்சிராணி, சங்க துணைத் தலைவர் ம.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை பி.மீனாட்சி வரவேற்றார்.
கல்விப்பணியில் காமராஜர் என்ற தலைப்பில் கவிஞர் மு.முருகேஷ், சங்கச் செயலர் பா.சீனிவாசன், கவிஞர் வந்தை குமரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளி இசை ஆசிரியர் டி.வி.வெங்கடசேன் மற்றும் பள்ளி மாணவிகள் காமராஜர் பாடல்களை இசையோடு பாடினர். மேலும், காமராஜர் குறித்த பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாஸ்கரன், பொருளாளர் பரமசிவம், பள்ளி ஆசிரியர் எ.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.
ஆரணி:  ஆரணியை அடுத்த களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் ச.வசந்தா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜி.ராஜேந்திரன், என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். களம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.பழனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் மாணவர்களுக்கு காமராஜர் குறித்த பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழாசிரியர்கள் ஜி.அன்பரசு, எம்.தாஸ், கமலாம்பாள், பரிமளா, ரம்யா, ஓவிய ஆசிரியர் கே.கோசலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போளூர்: போளூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அந்தமான், நிக்கோபர் மாநில தேர்தல் பொறுப்பாளர் வசந்தராஜ் தலைமையில், போளூர் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை அந்தக் கட்சியினர் ஊர்வலமாக வந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு,  அன்ன தானம் வழங்கினர். இதில், மாவட்டப் பொருளாளர் சத்தியன், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com