பரண் மேல் ஆடு வளர்ப்பு: இன்று இலவசப் பயிற்சி முகாம்

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூலை 18, 19) பரண்மேல் ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூலை 18, 19) பரண்மேல் ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்குகிறது. இங்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் பரண்மேல் ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிற்சி முகாமில் முதலில் வரும் 50 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், இந்த இலவசப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புறவழிச்சாலை, வடஆண்டாப்பட்டு, திருவண்ணாமலை என்ற முகவரியில் அணுகலாம். மேலும், 04175-206577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார்
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com