மருதாடு ஏரியை சிற்றணையாக மாற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஏரியை சிற்றணையாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஏரியை சிற்றணையாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க வந்தவாசி வட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு சங்க வந்தவாசி வட்டத் தலைவர் சி.பூங்காவனம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சிவாஜி, மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி இரா.இராமகிருஷ்ணன், எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்டச் செயலர் எஸ்.ரவி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.அரிதாசு, மாவட்டக் குழு உறுப்பினர் கி.பால்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இயற்கை வேளாண்மை குறித்து செய்யாறு வட்டத் தலைவர்
மு.வேலாயுதம் பேசினார்.
பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வந்தவாசி வட்ட புதிய தலைவராக எ.சம்பத்து, செயலராக ந.இராதாகிருஷ்ணன், பொருளாளராக என்.பிரபாகரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், செயல்படாமல் உள்ள மங்கலம் மாமண்டூர், தெள்ளாறு, பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறையில் நில ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள முறையற்ற பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000-மும் வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com