வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பகுதியில் விவசாயிகளுக்கான  வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பகுதியில் விவசாயிகளுக்கான  வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் மையம்,  உழைக்கும் கரங்கள் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு பெரணமல்லூர் வேளாண் உதவி இயக்குநர் குமரன் தலைமை வகித்தார்.
 தோட்டக்கலை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர்.  விவசாய சங்கச் செயலாளர் சத்தியராஜ் வரவேற்றார்.
  கருத்தரங்கில் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய உதவி இயக்குநர் ஜெயபாலன், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ரமேஷ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு,  நவீன தொழில்நுட்பத்தில் மகசூலை அதிகரித்தல், மண் ஆய்வின் அடிப்படையில் தகுந்த உரங்களை இட்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில் நுட்பம் கடைபிடிப்பதன் மூலம் மண் வளம் அதிகரித்து விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும்,  பசுந்தழை உரங்கள் தயாரிப்பு குறித்தும்  எடுத்துரைத்தார்.    நிகழ்ச்சியில் ஆரணி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் நாராயணன்,   விவசாயிகள் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com