தற்கொலை மிரட்டல் விடுத்த சமூக ஆர்வலரால் பரபரப்பு

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சமூக ஆர்வலரால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சமூக ஆர்வலரால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றக் கட்டடத்தின் மீது ஏறிய ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் அங்கு வந்து சமாதானப்படுத்தினர். ஆனால், அவர் கீழே இறங்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கீழே இறக்கி விசாரித்தனர்.
விசாரணையில், தற்கொலை மிரட்டல் விடுத்தவர் திருவண்ணாமலையை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வைத்தியலிங்கம் (39) என்பதும், பொதுப் பிரச்னைகளுக்காக வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து நீதிமன்றக் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, வைத்தியலிங்கத்தை போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com