காலாவதியான பொருள்களை வணிகர்கள் விற்கக் கூடாது: விழிப்புணர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

காலாவதியான பொருள்களை வணிகர்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காலாவதியான பொருள்களை வணிகர்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேத்துப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணைந்து நடத்திய வணிகர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அண்ணாமலை, சீனுவாசன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின்போது, வணிகர்கள் அனைவரும் காலாவதி தேதி குறிப்பிட்ட தரமான பொருள்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். காலாவதி பொருள்கள், போலி பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. அனைத்து வணிகர்களும் பொருகள்களை விற்பனை செய்வதற்கான உரிமச் சான்று (லைசென்ஸ்) வைத்திருக்க வேண்டும். உணவகம், டீக்கடைகளில் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com