ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம், சிந்தனைச் சாரல் - 38 என்ற தலைப்பில் நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் து.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன் முன்னிலை வகித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஓய்வு பெற்ற அரசு சார்பு செயலர் ரா.கோவிந்தராஜ், மெர்வின் எழுதிய முயற்சியே முன்னேற்றம் என்ற நூலை அறிமுகம் செய்து வைத்து ஆசிரியர் பணியின் சிறப்பு குறித்து விளக்கிப் பேசினார். மேலும், மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நடைபெற்ற சிறப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் ஆசிரியர் தேர்வை எதிர்கொள்ளும் யுக்திகள், தேர்வை கையாளும் விதம் குறித்து கூட்டுறவு தணிக்கையாளர் செல்வபாண்டியன், ஆசிரியர்கள் பச்சையப்பன், நித்யா ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கினர். இதில், நல் நூலகர்கள் வெங்கடேசன், திருச்செந்தில், மைய நூலகர் சாயிராம், மைய நூலக நூலகர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com