செய்யாறில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயக் கணக்குத் தணிக்கை (ஜமாபந்தி) வெள்ளிக்கிழமை தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயக் கணக்குத் தணிக்கை (ஜமாபந்தி) வெள்ளிக்கிழமை தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்யாறு வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1426-ஆம் பசலி ஆண்டு செய்யாறு வட்ட வருவாய்த் தீர்வாயக் கணக்குத் தணிக்கை திருவண்ணாமலை மாவட்ட தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜோதி தலைமையில் நடைபெறுகிறது.
ஜமாபந்தியின் போது, நிலவரி கணக்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பிர்காவைச் சேர்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள் தனியாக கவனிக்கப்படும்.
மனு அளிக்க விரும்பும் விவசாயிகள், மனுவின் ஒரு நகலை ஜமாபந்திக்கு 2 நாள்களுக்கு முன்னதாக தீர்வாய அலுவலர் அல்லது வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கலாம். இதர நாள்களில் அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
ஜமாபந்தி நடைபெறும் நாள்கள்: மே 19, 22, 23-ஆம் தேதிகளில் தேத்துறை உள்வட்டம், மே 23, 24-ஆம் தேதிகளில் அனக்காவூர் உள்வட்டம், மே 25, 26-ஆம் தேதிகளில் வடதண்டலம் உள்வட்டம், மே 26, 29-ஆம் தேதிகளில் வாக்கடை உள்வட்டம், மே 30-ஆம் தேதி செய்யாறு உள்வட்டம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com