கார் விபத்தில் திருவண்ணாமலை எம்.பி. காயம்

திருவண்ணாமலை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா காயமடைந்தார்.

திருவண்ணாமலை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா காயமடைந்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா. இவர், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் உள்ளார். வனரோஜா வியாழக்கிழமை இரவு திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1.30 மணிக்கு திருவண்ணாமலையை அடுத்த எறையூர் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா காய
மடைந்தார்.
காரில் பயணம் செய்த வனரோஜாவின் கணவர், கார் ஓட்டுநர் ஆகியோரும் லேசான காயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com