கழிவு நீர் கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்: போளூர் பேரூராட்சி எச்சரிக்கை

போளூரில் கழிவு நீர் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி சார்பில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

போளூரில் கழிவு நீர் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி சார்பில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
போளூர் நகரில் பழைய பஜார், வேலூர் - திருவண்ணாமலை சாலை, வளைவுச் சாலை, ஜமுனாமரத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 50-க்கு மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் கழிவுகள் பேரூராட்சியில் உள்ள கால்வாயில் கொட்டப்படுவதால், கழிவு நீர் தேங்குவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பேரூராட்சிக்கு புகார் வந்ததாம்.
இதையடுத்து, கழிவு நீர் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் இறைச்சிக் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு, சுகாதார ஆய்வாளர் சோமு மற்றும் பணியாளர்கள் நோட்டீஸை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com