காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பெரணமல்லூர் அருகே நாவல்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரணமல்லூர் அருகே நாவல்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரணமல்லூரை அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக காசி விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது.
இதற்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், முதலாம் கால யாகபூஜை, கோபூஜை, தம்பதி பூஜை, இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சிறப்பு பூஜை நடத்தி, காலை 10 மணிக்கு மேல் மேளதாள ஊர்வலத்துடன் கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தினர்.
பின்னர், பரிகார மூர்த்திகளுக்கும்,  மூலவருக்கும் கலச நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com