தெள்ளாறில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்தச் சங்கத்தின் தெள்ளாறு கிளை சார்பில் தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, சிலர் தரையில் படுத்து கொசு வலையால் உடலை மூடிக் கொண்டும், கைகளில் தீப்பந்தம் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளைத் தலைவர் வெ.சரவணன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் சு.கவியரசு முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ம.பா.நந்தன், அப்துல்காதர், மாவட்டத் தலைவர் சு.சிவக்குமார், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கி.பால்ராஜ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் வே.சிவராமன், கிளைச் செயலர் தே.பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தெள்ளாறு ஊராட்சியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும்.
தெள்ளாறு ஊராட்சி முழுவதும் முறையான வடிகால் வசதியுடன் கழிவுநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் தெரு மின் விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறுக்கு தெருவில் தரமின்றி கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் சுகாதாரமாக பராமரித்து குளோரின் கலந்த குடிநீர் வழங்க வேண்டும். தனிநபர் கழிப்பறை திட்டத்தை அனைத்து வீடுகளிலும் முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com