பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. செங்கம் - போளூர் சாலையில் உள்ள இந்தப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், முதல் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கமால்பாஷா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளைச் செயலர் ராமமூர்த்தி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஏழுமலை, சுவாமி விவேகானந்தா சேவா சங்க நிர்வாகிகள் ராமஜெயம், சீனுவாசன் மற்றும் செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவீதா, முதல்வர் சி.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், பாடல், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி: செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் எ.பி.சையத் அப்துல் இலியாஸ் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் க.கோவேந்தன் வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, ரோட்டரி மாவட்ட மாநாடு பொருளாளர் பி.சாய்சரவணன், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின்  படத்தைத் திறந்து வைத்ததுடன், அனக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திருக்குறள் புத்தகங்களை அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.செல்வராஜிடம் வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி, நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆங்கில கையகராதி பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் தி.எ.ஆதிசேகவன், வேலூர் மிட்டவுன் பெருங்கொடையாளர் ஷியாம் முராரிலால், லோகேஷ், பி.கணேசன், சி.ஜெயபால், செயலர் ஆர்.கிருஷ்ணன், கோதண்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி: செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 129-ஆவது பிறந்த நாள் விழா, அறிவியல் சங்கம் தொடக்கம் என இருபெரும் விழா நடைபெற்றன.
பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளர் என்.துரைராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி பங்கேற்று அறிவியல் சங்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும், ஜவாஹர்லால் நேருவின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை முதன்மை முதல்வர் எஸ்.பாலதண்டாயுதபாணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
அல்லியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி: பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பெரணமல்லூர் ரோட்டரி சங்கம், வேலூர் மிட்டவுன் சங்கம் மற்றும் செய்யாறு இன்னர்வீல் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து உலக இன்ராக்ட் வாரம், மாணவர்களுக்கு அகராதி வழங்குதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சிகளை நடத்தின.
நிகழ்ச்சிக்கு பெரணமல்லூர் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.தண்டபாணி தலைமை வகித்தார். செய்யாறு இன்னர்வீல் ரோட்டரி சங்கத் தலைவர் லதா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றோரை பள்ளித் தலைமை ஆசிரியர் பி.மாலவன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட மாநாடு தலைவர் பெப்சி சீனிவாசன் பங்கேற்று, பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு சுமார் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ஆங்கில அகராதிகளை வழங்கினார்.
கௌரவ விருந்தினர்களாக மாவட்ட துணைச் செயலர் ஏ.மாசிலாமணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மெய்.பூங்கோதை ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைவர் தேர்வு பி.கே.பழனி, ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.தண்டபாணி, பொருளாளர் ஜி.தயாளன், ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com